வாய்மேடு பகுதியில் பரவலாக மழை

வாய்மேடு பகுதியில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2023-10-21 19:00 GMT

வாய்மேடு, தகட்டூர், தாணிக்கோட்டகம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக நேரடி நெல் விதைப்பு செய்யும் பணி நடந்து வந்தது. ஆனால் மழை பெய்யாத காரணத்தினால் மீண்டும் டிராக்டர் மூலம் நெல் விதைக்கப்பட்ட வயல்களை உழுது மீண்டும் நேரடி நெல் விதைப்பு பணியினை கடந்த 2 நாட்களாக விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக கனமழை பெய்தது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான மழை இல்லாமல் தவித்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்