திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-06-20 17:40 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்தது. ஆம்பூரில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 18 மில்லி மீட்டர், ஆலங்காயத்தில் 10 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது.

மேலும் நேற்று காலை 9 மணி வரை தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டே இருந்ததால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுமுறை அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து 10 மணிக்கு மேல் மழை எதுவும் இல்லாமல் வானம் வெறிச்சோடியது. திடீரென இரவு 8 மணி முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்