நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குறுக்குச்சாலை, நத்தமேடு, வேட்டமங்கலம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், புன்னம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, காகிதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் அவதி அடைந்தனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.