கரூர்-நொய்யல் பகுதியில் பரவலாக மழை

கரூர்-நொய்யல் பகுதியில் பரவலாக மழை பெய்தது

Update: 2022-12-01 19:19 GMT

கரூரில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றும் காலையில் பனி பொழிவு அதிகமாக இருந்தது. மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையானது சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதனால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.இதேபோல் நொய்யல், தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை, திருக்காடுதுறை, காகிதபுரம்,மரவாபாளையம், வேட்டமங்கலம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும், நடந்து சென்றவர்கள் மனையில் நனைந்தனர். சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். நீண்டநாள் இடைவெளிக்கு பின் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்