கரூர் வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம், தாந்தோணிமலை, வையாபுரிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றுகாலை 7 மணி முதல் 7.30 வரை பரவலாக மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோல் நொய்யல், நன்செய் புகழூர், தவிட்டுப்பாளையம், புன்னம் சத்திரம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், மரவாபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காலை 10 மணி வரை பரலாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவும் மழைபெய்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 6 மணியில் இருந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- அணைப்பாளையம்- 3.6 மில்லி மீட்டர், பரமத்தி-1.2, கிருஷ்ணராயபுரம்-3, மாயனூர்- 5, பஞ்சபட்டி-2.6, பாலவிடுதி-5.2 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளன.