கரூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 9.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள மழையில் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. இதனால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.