திருவெண்காடு:
சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் பணிப்பொழிவால் நெற்பயிரில் இலை கருகல் நோய், புகையான் உள்ளிட்ட நோய்கள் தாக்கியது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். தற்போது மார்கழி மாத பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. நேற்று காலை சீர்காழி பகுதிகளில் ½ நேரம் பரவலாக மழை பெய்தது. பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு உபயோகமாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் நிலக்கடலை பயிர்களுக்கும் பயனளிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.