மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி
மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து புதுப்பிக்கப்பட்ட சாலையை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர் உள் தணிக்கை ஆய்வு செய்தனர். அப்போது சாலைகளை அளந்தும், அதன் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி கோட்டப்பொறியாளர் இந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.