ஆட்டோ டிரைவரை எரித்து கொன்றது ஏன்?

ஆட்டோ டிரைவரை எரித்து கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான பட்டதாரி வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.;

Update: 2023-01-23 18:45 GMT

ஆட்டோ டிரைவரை எரித்து கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான பட்டதாரி வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

எரித்து கொலை

கோவை வீரையம்பாளையம் அருகே காந்தி வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 47). லோடு ஆட்டோ டிரைவர்.

சம்பவத்தன்று இவர் காளப்பட்டி ரோடு நேருநகரில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு, தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ரவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ரவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து பீளமேடு போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வேலை கிடைக்காத விரக்தி

விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பூமாலை ராஜா (23) என்பது தெரியவந்தது.

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து உள்ளேன். 2 ஆண்டுக ளுக்கு முன்பு கோவை வந்து நேரு நகரில் தங்கி வேலை தேடி வந்தேன்.

ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்தேன். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டேன்.

தீ வைத்தேன்

இந்த நிலையில் எனக்கும், ரவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி ரவி மீது ஊற்றி தீ வைத்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது பொதுமக்கள் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொலையுண்ட ரவிக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்