ஆற்று மணல்களை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது ? - மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
ஆற்று மணல்களை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என மத்திய அரசுக்கு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர் .
பாதுகாக்கப்பட்ட தாது மணல்களை மத்திய அரசு கண்காணிப்பது போல் ஏன் ஆற்று மணல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது என மத்திய அரசுக்கு மதுரை கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர் .
கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் மணல் குவாரி சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.