ராகுல்காந்திக்காக காங்கிரசார் கடுமையாக போராடுவது ஏன்? கே.எஸ்.அழகிரி பதில்

ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து பேசுகிறார்.

Update: 2022-06-18 22:51 GMT

அவர் தனது பேட்டியில், இந்த பிரச்சினையில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் பணப்பரிவர்த்தனை எதுவும் இல்லாத நிலையில் அமலாக்கத்துறை விசாரணை தேவை இல்லை. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளுக்குள் ஒரு குழப்பத் தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைய பா.ஜ.க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் நல பிரச்சினைகளில் போராடாத காங்கிரஸ் ராகுல்காந்திக்காக, இந்தியா முழுவதும் இவ்வளவு வலிமையாக போராடுவது ஏன்? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த அவர், எரிபொருள் விலை உயர்வு உள்பட பல பிரச்சினைகளில் இந்தியா முழுவதும் பல போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்து இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி யார்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க.தான் என்றும், மக்கள் மன்றத்திலும் வலிமையான கட்டமைப்புகளை கொண்ட கட்சியும் அ.தி.மு.க.தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும், எம்.பி. பதவி தனக்கு கிடைக்காதது ஏன்? வேலைவாய்ப்பு அளிக்கும் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்ப்பது ஏன்? ஜனாதிபதி தேர்தலில் கிறிஸ்தவ வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாக கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்