இளம்பெண்ணை குத்திக்கொன்றது ஏன்?-கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லையில் தர்காவில் இளம்பெண்ணை குத்திக்கொன்றது ஏன்? என கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-05-23 20:04 GMT

பேட்டை:

நெல்லையில் தர்காவில் இளம்பெண்ணை குத்திக்கொன்றது ஏன்? என கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குத்திக்கொலை

நெல்லை மேலப்பாளையம் பெஸ்ட் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் கான் (வயது 32). இவர் வெளியூர்களில் நடக்கும் பொருட்காட்சியில் கடை அமைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஹசினா பேகம் (28). நேற்று முன்தினம் நெல்ைல டவுன் கோடீஸ்வரன் பகுதியில் உள்ள குளத்தாங்கரை தர்காவுக்கு இம்ரான் கான் தனது மனைவியை அழைத்து சென்றார்.

அப்போது, அங்கு வைத்து தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஹசினா பேகத்தை குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கத்தியுடன் ெநல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் இம்ரான் கானை பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து, இம்ரான் கானை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசில் இம்ரான் கான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இம்ரான் கானுக்கும், நெல்லை டவுன் முகமது அலி தெருவைச் சேர்ந்த ஹசினா பேகம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மேலப்பாளையத்தில் வீட்டருகே உள்ள அப்துல் காதர் என்பவரிடம் ஹசினா பேகம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நெருங்கி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இம்ரான் கான் வீட்டிற்கு தெரியவரவே கண்டித்துள்ளனர்.

தீர்த்துக்கட்ட முடிவு

கடந்த 20-ந் தேதி இரவில் இம்ரான் கான் வீட்டிற்கு சென்ற அப்துல் காதர் தன்னுடன் வருமாறு ஹசினா பேகத்தை அழைத்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இம்ரான்கான் தந்தை மகபூப்ஜான் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இருதரப்பினரையும் போலீசார் வரவழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஹசினா பேகம் டவுனில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த இம்ரான் கான் ஹசினா பேகத்தை தீர்த்து கட்டமுடிவு செய்தார். டவுனில் உள்ள ஹசினா பேகத்தை நேற்று முன்தினம் மதியம் இம்ரான் கான் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு மதிய உணவு சாப்பிட்ட பின் மனைவியிடம் தனியாக பேச வேண்டும் என கூறி குளத்தாங்கரை தர்காவுக்கு அழைத்து சென்று குத்திக்கொலை செய்துள்ளார்.

மேற்கண்டவாறு வாக்குமூலத்தில் இம்ரான் கான் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்