சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏன் உயருகிறது? - கேள்வி கேட்ட பொதுமக்களிடம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிய விளக்கம்...!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார்.

Update: 2023-04-02 09:26 GMT

காஞ்சிபுரம்,

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு சென்றார். பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நிர்மலா சீதாராமனிடம் சமையல் எரிவாயு விலை ஏன் உயருகிறது? என்று கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களின் கேள்விக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த பதில்,

சிலிண்டரில் நிரப்பக்கூடிய சமையல் எரிவாயு நமது நாட்டில் இல்லை. அதை நாம் இறக்குமதி செய்கிறோம். அரசு தன் கையில் இருந்து 600 ரூபாய் போட்டு உங்களுக்கு சரி 600 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியது. இப்போது அந்த அளவிற்கு விலையை குறைக்க வேண்டுமானால் அரசிடமும் பணம் இருக்க வேண்டும்... இல்லையா... இருக்கிறது அதை பல திட்டங்களுக்கும் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்