தென்னை மரங்களில் வெள்ளைப்புள்ளி நோய்

நன்னிலம் பகுதிகளில் தென்னை மரங்களில் வெள்ளைப்புள்ளி நோய்

Update: 2023-04-11 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலம் பகுதிகளில் தென்னை சாகுபடியை விவசாயிகள் உபத் தொழிலாக செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் உபரி வருமானம் பெற்று வருகின்றனர். தென்னை மரங்களில் மட்டைகளில் உள்ள ஓலைகளில் உட்புறத்தில் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றி பூஞ்சானம் போன்ற ஒரு வித பூச்சி ஏற்படுகிறது. இதனால் மட்டை ஒரு குறிப்பிட்ட காலத்தில் காய்ந்து கீழே விழுந்து விடுகிறது. இதனால் தென்னை மரத்தில் தேங்காய் காய்ப்பதும் குறைந்து கொண்டிருக்கிறது. இதனால் தென்னை மரங்கள் காய்க்கும் தன்மையை இழக்க நேரிடும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே வேளாண் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்