கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்த பெண் பலி
போடி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்த பெண் பலியானார்.
போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் பால் வைரமுத்து. இவரது மனைவி பாண்டீஸ்வரி (வயது 27). நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் சுருளி அருவிக்கு சென்று கொண்டிருந்தனர். ராயப்பன்பட்டி தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது சாலையில் இருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்ேபாது மோட்டர்சைக்கிளில் இருந்து பாண்டீஸ்வரி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.