ஒரே டிக்கெட்டில் பஸ்,ரெயில் , மெட்ரோவில் பயணிக்கும் முறை எப்போது ஆரம்பம்? - சென்னை மக்களுக்கு குட் நியூஸ் ..!
நேர விரயம், அலைச்சல், பயணத்தில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே இ-டிக்கெட் முறை, அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது. மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்துடன், சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனி செயலி உருவாக்குவது குறித்து பேசப்படுவதாக தெரிகிறது.
இந்த பணிகள் நிறைவு பெற்றதும், ஒரே இ-டிக்கெட் முறையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர விரயம், அலைச்சல், பயணத்தில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.