தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-05-22 08:46 GMT

சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் உள்ள நிலையில், 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவியது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்