டிராக்டரில் வைக்கோல் ஏற்றி வந்த போது மின்கம்பி பட்டு தீப்பிடித்தது
டிராக்டரில் வைக்கோல் ஏற்றி வந்த போது மின்கம்பி பட்டு தீப்பிடித்து எரிந்தது.
சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரின் நிலத்தில் இருந்து டிராக்டர் மூலம் வைக்கோலை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசியதால் வைக்கோல் தீடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கி, சில நிமிடங்களில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டு வைக்கோல் ராஜேந்திரன் மீது விழுந்து தீக்காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.