கணவருடன் சென்றபோதுமோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் படுகாயம்
பெரியகுளம் அருகே கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் படுகாயம் அடைந்தார்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). இவரது மனைவி கோகிலவாணி (55). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வத்தலக்குண்டுவில் இருந்து மோட்டார் சைக்கிளில் டி.கள்ளிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டினார். பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியில் வந்தபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த கோகிலவாணி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.