நீட் தேர்வு ரத்து எப்போது? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி

முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ன ஆனது? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-01-07 15:07 GMT

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் ஆகப் போகிறது! முதல் நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து! இதுவே முதன்மையான தேர்தல் வாக்குறுதி! அந்த முதல் நாளே முதல் கையெழுத்து போடாமல் இன்று ஊர் ஊராக கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார். இதில் நானும் கையெழுத்து போட்டு போகாத ஊருக்கு வழி சொல்ல வேண்டுமாம். யாரை ஏமாற்ற நினைக்கிறார் உதயநிதி?

மக்களிடம் பொய் சொல்லி அவர்களின் வாக்குகளை வாங்கி அராஜக ஆட்சி நடத்தி கொண்டு இன்னும் நீட் தேர்வு ரத்து என நாடகம் போட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்