ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - தலைமை தோ்தல் அதிகாரி பதில்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-01-05 06:31 GMT

சென்னை,

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார். அதன்படி, சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) உள்ளனர்.

இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.

இந்நிலையில், வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தோ்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதிலளித்து கூறியதாவது:-

"சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைபடி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்