துணி காய போடும்போதுமின்சாரம் தாக்கி பெண் பலி
துணி காய போடும்போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்
மதுரை கரிமேடு பெத்தானியாபுரம் ஆசைத்தம்பி தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 39). சம்பவத்தன்று இவர் துவைத்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின் கம்பியில் அவரது கை உரசியது, அதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.