மொபட் மீது கார் மோதியதில்அரசு செவிலியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

மொபட் மீது கார் மோதியதில் அரசு செவிலியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2023-10-18 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையை சேர்ந்த வீராசாமி மனைவி இந்திரகலா (வயது 48). இவரும், கோவில்பட்டி மூப்பன்பட்டி கிழக்கு தெரு மனோகரன் மனைவி பானுமதியும் (36) நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலயர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை 5 மணியளவில் வேலை முடிந்து இருவரும் மொபட்டில் வீ்ட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். கோட்டூர் விலக்கு அருகே சென்றபோது, பின்னால் திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் மொபட்டிலிருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி தெர்மல் நகர் மீனாட்சி சுந்தரம் மகன் சங்கர் (59) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்