"அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதில் என்ன தவறு? "- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மத்திய மந்திரி அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதில் என்ன தவறு? என பாஜகவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-04-13 07:46 GMT

சென்னை,

ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா டிக்கெட் வைத்து இருக்கிறார் என கிண்டலாக சில விஷயங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார் என்றும் அவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பாஜகவின் கோரிக்கையை அவைத்தலைவர் நிராகரித்ததையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், இது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-


"சட்டசபையில் அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா?. விமர்சனம், கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை, திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. பேசியதில் தவறு இருந்திருந்தால் அவை குறிப்பில் இருந்து நானே நீக்க சொல்லிருப்பேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்