அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? மதுரை ஆதீனம் ஆவேசம்

மதுரையில் விஷ்வஇந்துபாிஷித் சாா்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது.;

Update: 2022-06-06 03:16 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் விஷ்வஇந்துபாிஷித் சாா்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருப்போரூா், மதுரை,தருமபுரம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டு உரையாற்றினா்.

அப்போது பேசிய மதுரை ஆதீனம், ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யாா் பேசுவது என்றும் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? என்றும் கேள்வி எழுப்பினாா். இலங்கையில் கோவில்களை இடித்ததால் ராஜபக்சே இருக்கும் இடம் தொியவில்லை. தமிழகத்திலும் கோவில்கள் இடிக்கப்படுகின்றன.

எனவே, கோவில்களில் கையை வைக்காதீா்கள் என் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என அவா் பேசினாா்.

Tags:    

மேலும் செய்திகள்