மேட்டூர் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன?தேடும் பணி தீவிரம்

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன? என்று தெரியாத நிலையில் உடலை தேடும் பணி நடந்தது.;

Update: 2023-02-23 21:00 GMT

மேட்டூர், 

என்ஜினீயரிங் மாணவர்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஜீவா (வயது 21). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து மேட்டூர் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்தார். மேட்டூரை அடுத்த செக்கானூர் கதவணை அருகே உள்ள பகுதியில் நண்பர்களுடன் ஜீவா ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஜீவா திடீரென ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீர் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே மேட்டூர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தேடும் பணி

அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மாணவரை பரிசலில் சென்று ேதடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று இரவு வரை மாணவர் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மீ்ண்டும் மாணவரை தேடும் பணி நடைபெறும். மாணவரின் கதி என்ன? என்பது குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்