பாகலூரில், பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி கதி என்ன?-4-வது நாளாக தேடும் பணி இன்றும் நடக்கிறது

பாகலூரில், பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவி கதி என்ன என்று தெரியவில்லை. 4-வது நாளாக அவரை தேடும் பணி இன்றும் நடக்கிறது

Update: 2023-07-13 18:30 GMT

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் தேஜஸ்வினி (வயது 16). இவர் பாகலூர்-பேரிகை சாலையில் முகுல பள்ளி அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி இரவு ஓசூர்-மாலூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் இருந்து கீழே ஆற்றில் குதித்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுமியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் மாணவியை தேடும் பணி தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்