மாணவர்களுக்கு ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு

ஊட்டியில் மாணவர்களுக்கு ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-10-12 20:00 GMT

தேசிய பசுமை படை சார்பில் ஈர நில பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி எச்.பி.எப். உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார். தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் பிரீத்தா குமாரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது, ஈர நிலங்களை சார்ந்து கேட்டில் எக்ரிட், கிரேட் வாக்டைல், சன்ட் பில்லோவர் போன்ற 20-க்கும் மேற்பட்ட பறவைகள், தவளை இனங்கள் உள்ளன. மேலும் வசம்பு வல்லாரை, கோரை புற்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளது. எனவே நீலகிரியில் அழிந்து வரும் ஈர நில பகுதிகளின் பல்லுயிர் தன்மையை பாதுகாக்க வேண்டும். மேலும் இது எதிர்காலத்தின் நீராதாரத்திற்கு அடிப்படை ஆகும் என்றார்.முன்னதாக மாணவர்களை ஈர நிலத்துக்கு அழைத்து சென்று, அங்குள்ள உயிரினங்கள், தாவர இனங்கள், ஈர நிலத்தின் தன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் அறிவியல் ஆசிரியர் பிரேமலதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்