மேற்குவங்க சுற்றுலா பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மேற்குவங்க சுற்றுலா பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2023-09-30 21:09 GMT

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் தலைமையிலான போக்குவரத்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுற்றுலா வந்த 6 பஸ்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்த ஒரு சுற்றுலா பஸ்சின் உரிமையாளர் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றை செலுத்தாமல் தமிழகத்துக்குள் பஸ்சை இயங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பஸ்சின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரத்து 410 அபராதம் விதித்தனர். அபராத தொகையை அவர் செலுத்தியதை தொடர்ந்து அந்த பஸ் விடுவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்