வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்றசிறுவர்களை மீட்டு தர வேண்டும்:கலெக்டரிடம், உறவினர்கள் மனு

வடமாநிலத்திற்கு சென்ற சிறுவர்களை மீ்ட்டு தர வேண்டும் என்று கலெக்டரிடம் அவரது உறவினர்கள் மனு கொடு்த்தனர்.

Update: 2023-05-22 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்வேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் 3 பேர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள கடைக்கு வேலைக்கு சென்றனர். அதன்பிறகு அந்த சிறுவர்கள் தினந்தோறும் பெற்றோரிடம் செல்போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த 15 நாட்களாக அந்த சிறுவர்கள் பெற்றோரிடம் பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களை வேலைக்கு அழைத்து சென்றவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது அவர்கள், சிறுவர்கள் வேலையை விட்டு சென்று 10 நாட்களுக்கு மேல் ஆகிறது என்றனர். இதையடுத்து பெற்றோர் ராஜதானி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற எங்களது உறவினர் மகன்களை மீட்டு தர வேண்டும்' என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்