100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மன்னார்குடியில் நடந்த ஜமாபந்தியில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
மன்னார்குடி;
மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியர் பவானி தலைமையில் நடந்தது. மன்னார்குடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 97 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட 12 வகையான கோரிக்கைகள் அடங்கிய 396 மனுக்களை அளித்தனர். நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி தாசில்தார் கார்த்தி முன்னிலை வகித்தார். தனித்துணை ஆட்சியர் பவானி 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் குணசீலி, வட்ட வழங்கல் அலுவலர் மகேஷ், மண்டல துணை தாசில்தார் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.