ஆதரவற்ற மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா
காவேரிப்பட்டணத்தில் ஆதரவற்ற மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
காவேரிப்பட்டணத்தில் தொழில் அதிபரும், தி.மு.க. பிரமுகருமான கே.வி.எஸ். சீனிவாசன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து காவேரிப்பட்டணம் அன்னை அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் உணவுப் பொருட்களை தொழில் அதிபர் கே.வி.எஸ்.சீனிவாசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, எஸ்.ஆர்.ராஜன், நகர துணை செயலாளர் விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன், தமிழ்ச்செல்வி சோபன்பாபு, கோகுல்ராஜ், குப்பன், பாரதிராஜா, டைலர் நாகராஜ், தினேஷ் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.