பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பாவூர்சத்திரம் அருகே மேலமெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேலமெஞ்ஞானபுரத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் கரூர் முரளி, பேச்சாளர்கள் சாக்ரடீஸ், மாரியப்பன், சகாயம், முத்துவேல், மரியராஜ் ஆகியோர் பேசினார்.
மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜான்சிஜெயமலர், வளன்ராஜா, தர்மராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.பி.அருள், சாமித்துரை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதிவிஜயன், மருத்துவர் அணி தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்தியராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆரோக்கியசாலமன் நன்றி கூறினார்.