விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தகரகுப்பம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு, கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.;
வாலாஜா ஒன்றியம் தகரக்குப்பம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, இதில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு, நேரடி நெல் விதைப்பு கருவிகளையும், தென்னை மரம் ஏறும் கருவி, ரோட்டாவேட்டர் கருவி, பண்ணை கருவிகள், நெல் அறுவடைக்குப்பின் பயிர் செய்திட உளுந்து பயிறு விதைகள் ஆகியவற்றை வழங்கி அங்கிருந்த பெண்களிடம் கலெக்டர் கலந்தரையாடினார். அப்பொழுது அவர் பேசுகையில், ''ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமான பெண் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது குற்றமாகும். பழைய காலத்தில் இருந்தது வேறு இன்றைய நவீன காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை உங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதை உணர்ந்து அவர்களை கல்லூரி படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும். தயவு கூர்ந்து இதை ஒவ்வொவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்றார்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், லதா மகேஷ், உதவி இயக்குனர்கள் பெருமாள், சண்முகம், பாலாஜி, வேளாண் அலுவலர்கள் சுரேஷ் குமார், நித்யா, வேளாண் உதவி பொறியாளர்கள் ரூபன் குமார். ரவிக்குமார், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.