தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்க விழா மற்றும் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் 25 பேருக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு ஆனைமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தேவசேனாதிபதி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கன்னிமுத்து, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், பொள்ளாச்சி நகர துணை செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி துணை தலைவர் ரகுபதி, ஒன்றிய கவுன்சிலர் பாரதி நரசிம்மன், கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அஜிஸ், ஆழியாறு ஆனந்த், வார்டு உறுப்பினர் ஜெயசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.