99 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

99 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-04-29 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு:

சங்கராபுரம் ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி புளியங்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் பவித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், சங்கராபுரம் ஒன்றியக்குழு துணை தலைவர்அஞ்சலை கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு 99 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் நிறைமதி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், துணை தலைவர் ரஞ்சிதாசாமிதுரை, அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்