சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 96 பேருக்கு நலத்திட்ட உதவி
மசிகம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 96 பேருக்கு நலத்திட்ட உவிகள் வழங்கப்பட்டது.
மசிகம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 96 பேருக்கு நலத்திட்ட உவிகள் வழங்கப்பட்டது.
96 பேருக்கு நலத்திட்ட உதவி
பேரணாம்பட்டு தாலுகா மசிகம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. குடியாத்தம் சப்- கலெக்டர் தனஞ்செயன், பேரணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 149 மனுக்கள் பெறப்பட்டன.
அதில் 96 பேருக்கு தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா நகல், வாரிசு சான்று, ரேஷன் அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 49 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 4 மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கை
மதினாப்பல்லி கிராமத்தில் அரசு பஸ்கள் நிற்பதில்லை என்றும், பக்கத்து கிராமங்களுக்கு சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இரவு நேரங்களில் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மதினாப்பல்லியில் அரசு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், ம்மாறும், சேராங்கல் கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் இயக்க வேண்டும், மசிகம் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளி கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு இதுவரை கட்டப்படாததால் 2 வகுப்பறைகளில் இட நெருக்கடியுடன் 280 மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர். எனவே உடனடியாக கட்டிடம் கட்டித்தர வேண்டும், மசிகம் ஆற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சீதா, ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வடிவேல், பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.