மனுநீதி நாள் முகாமில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஆம்பூர் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-08-10 11:42 GMT

ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 57 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மாதனூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் சாந்திசீனிவாசன், மண்டல துணை தாசில்தார் குமரவேலு, ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்