மக்கள் தொடர்பு முகாமில் 135 பேருக்கு நலத்திட்ட உதவி
சிறுநாகுடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 135 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ஆர்.எஸ்.மங்கலம்
சிறுநாகுடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 135 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சிறுநாகுடி கிராமத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முலம் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது,
ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் 135 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் 96 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 15 தினங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படும்.
பொருளாதாரம்
ஒரு வீட்டில் ஆண் படித்தால் அவர் அளவில்தான் பயன்கள் இருக்கும், ஆனால் பெண் படித்து நல்ல நிலைக்கு செல்லும்போது அவர் மட்டும் இன்றி அவர் குடும்பத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.