123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமூலாவில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் சித்தராஜ், பழங்குடியின தாசில்தார் லோகநாதன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 187 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், முதியோர் ஓய்வூதியம் உள்பட 123 பயனாளிகளுக்கு ரூ.68 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.