5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.;
திருப்பத்தூர்,
நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 121 ஊராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை கார், சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள், வேன், டாடா ஏசி, கார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் ஆயுத பூஜை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சீருடைகள் மற்றும் உதவி தொகையை வழங்கி வருகிறார்.
அதன்படி இந்தாண்டு திருப்பத்தூர் நகரில் 9 இடங்கள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள ஆட்டோ, டாக்சி, வேன், கார், டாடா ஏசி டிரைவர்களுக்கு சீருடைகள், உதவித் தொகையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
ரூ.25 லட்சம்
அதன்படி 5000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீருடைகள் மற்றும் உதவித்தொகையை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கேஎஸ்.நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், நகர செயலாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் உதயசண்முகம், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், துணை சேர்மன் கான்முகமது, ஹரி அழகுராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வகிகள் பலர் கலந்துகொண்டனர்.