மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நல்லறிக்கை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-08-17 18:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா தலைமை தாங்கி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற நோக்கத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் நேரில் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களில் பயனடைவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். உங்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசின் திட்டங்களை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 159 நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் வேளாண்மை துறை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்