உளுந்தூர்பேட்டையில் நலத்திட்ட உதவிகள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-06-07 16:30 GMT

கள்ளக்குறிச்சி, 

உளுந்தூர்பேட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் மோகன், மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் ராமு, கிழக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 கிளை மன்றங்களை தொடங்கி வைத்தார். இதில் சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வ சுதா, ஒன்றிய செயலாளர் கில்லிசெல்வம் உளுந்தூர்பேட்டை ஒன்றிய, நகர, இளைஞரணி நிர்வாகிகள் விஜய் செல்வா, மெர்சல் கார்த்தி, பாரதிராஜா, விஜய், சந்துரு, அஜய்குமார், அய்யப்பன், திருநாவலூர் ஒன்றிய நிர்வாகிகள் சக்திவேல், சுபாஷ், பெரியசாமி மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்