நலத்திட்ட உதவிகள்

விளாத்திகுளம் அருகே நலத்திட்ட உதவிகள்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2022-07-22 17:21 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியில் மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், வேளாண் துறை சார்பில் விவசாய கருவிகள், உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 97 பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

மேலும் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பயறு, சிறு தானியங்கள், கடல் பாசி உரம் குறித்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தி.மு.க. ஒன்றிய செயலர் சின்ன மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்