பாரதியார்-செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு

நெல்லையில் பாரதியார்-செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-26 19:38 GMT

நெல்லை:

சென்னை சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் சார்பில் பாரதியார், அவருடைய மனைவி செல்லம்மாளின் முழு உருவ சிலை தென்காசி மாவட்டம் கடையத்தில் நிறுவப்படுகிறது. அதன்படி செல்லம்மாள் உடன் பாரதியார் இருக்கும் முழு உருவச் சிலை செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து ரதம் வடிவிலான வாகனத்தில் பல்வேறு முக்கிய ஊர்களில் வழியாக கடையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை சந்திப்பில் பாரதியார் படித்த பள்ளியான ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு ரதம் வந்தது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ரதத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பாரதியார் பயின்ற வகுப்பறைகள் பாரதி படைத்த பாடல்கள் மற்றும் கவிதைகள் பாடப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை, வள்ளியூர் வழியாக ரத ஊர்வலம் கன்னியாகுமாரி புறப்பட்டு சென்றது. முன்னதாக பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு ரதம் வந்தது. பாரதியார், செல்லம்மாள் வேடமிட்டும் மாணவர்கள் மலர் தூவியும் பரதநாட்டியம், நடனம் ஆடியும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்