தெலுங்கானா கவர்னருக்கு வரவேற்பு

தென்காசியில் தெலுங்கானா கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2022-12-04 18:45 GMT

நெல்லை பா.ஜனதா பிரமுகர் நயினார் நாகேந்திரன் மகன் திருமண விழா தென்காசி இசக்கி மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று மதியம் தென்காசி வந்தார். முன்னதாக குற்றாலம் வந்த அவரை ஒரு தனியார் விடுதியில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்