நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-29 14:27 GMT

நாசரேத்:

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடி 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் அல்பர்ட் ஜெயசிங் தாமஸ் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். எந்திரவியல்துறை தலைவர் வேத பாடம் வாசித்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்று பேசினார். குருவானவர் ராணி ஆபிரகாம் சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினரும் கல்லூரியின் தாளாளருமான ஜாண்சன் டேவிட் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாசரேத் நகர பஞ்சாயத்து துணை தலைவர் அருண்சாமுவேல் கலந்து கொண்டார். விரிவுரையாளர்கள் வினோத் பிரவின்குமார், ஜெசிந்பிரவின் சிறப்பு பாடல்கள் பாடினர். விரிவுரையாளர் ஜாண் விலிங்டன் நிகழச்சியை தொகுத்து வழங்கினார். கல்லூரியின் ஒழுங்கு முறை குறித்து மின்னனுவியல் துறை தலைவர் பெனிட்டா ராஜூ, வேலை வாய்ப்பு பற்றி ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜான்வெஸ்லி, கல்வி உதவி தொகை பற்றி ஏஞ்சலின் மற்றும் பஸ்வசதி பற்றி விரிவுரையாளர் ஆசிர் பால்சன் ஆகியோர் பேசினர். கல்லூரி நிதிக்காப்பாளர் தனபால் நன்றி கூறினார். இந் நிகழ்ச்சியில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர் பிரவின் ஐசக் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் செல்வின், ஹரிஸ் ரவி, சேகர உறுப்பினர்கள் ஜெரின், ஜெரோம், பாஸ்கர், செல்வின், ஐசக் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்