முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு

ஆம்பூரில் இருந்து திருப்பத்தூருக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-06-29 13:19 GMT

ஆம்பூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தில் உள்ள தனியார் ஷூ கம்பெனி விடுதியில் தங்கி இருந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8.30 மணிக்கு அங்கிருந்து திருப்பத்தூருக்கு காரில் புறப்பட்டார்.

அவருக்கு விண்ணமங்கலம், மின்னூர் ஆகிய பகுதியில் கட்சியினரும், பொதுமக்களும் உற்சக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வாணியம்பாடி தொகுதி தி.மு.க. சார்பில் நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், நகரமன்ற தலைவர் உமாசிவாஜிகணேசன் தலைமையில் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்லூரி மாணவிகள்

தொடர்ந்து வாணியம்பாடியில் சின்னகல்லுப்பள்ளி என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் பூச்செண்டு கொடுத்தும், சால்வைகள் வழங்கியும் முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

பொன்னேரி, ஜோலார்பேட்டை, கோடியூர், சாலை நகர் உள்ளிட்ட இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டும், பேண்டு வாத்தியம் முழுங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதேபோல் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவிற்கு வரும் வழியில் திட்ட விளக்க பணிகளை விளக்கி பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்