காரைக்குடி வந்த சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு

காரைக்குடி வந்த சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2023-04-29 18:45 GMT

காரைக்குடி

ரெயில்வே துறை சார்பில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி கோடைகால சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. இந்த ரெயில் பெங்களூரு, கிருண்ஷராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை வழியாக நேற்று காரைக்குடி வந்தடைந்தது. மீண்டும் இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து நேற்று மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதையொட்டி ரெயில் ஓட்டுநர்களுக்கு காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் சார்பில் அதன் தலைவர் சாமி திராவிடமணி மற்றும் செயலாளர், இணை செயலாளர் சையது ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதேபோல் கோடைகால விடுமுறைக்காக தெற்கு ரெயில்வேதுறை சார்பில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் கடந்த 27-ந்தேதி இயக்கப்பட்டது. இந்த ரெயில் கடந்த 27-ந்தேதி 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு மறுநாள் காலை 3.20 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு சென்றடைந்தது. மீண்டும் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 5.40 மணிக்கு வந்தடைந்தது. நேற்று காலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைந்தது. இந்த ரெயில் வருகிற 25-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்