ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-02 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் சந்திரசேகர். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 17ஆண்டுகளாக சேவை செய்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் பணிநிறைவு பெற்று நேற்று சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சிவகங்கை சீமை படைவீரர்கள் நற்பணி மன்றம் சார்பில் மேள, தாளத்துடன் அதிர்வேட்டுக்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்று ஊர்வலமாக அழைத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்